யாழில் இளைஞன் ஒருவன் நேற்று (23) விபரீத முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் கரவெட்டி மேற்கு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் சிவகலக்சன் 18 வயதுயுடைய இளைஞரே வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் .
சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இளைஞன் உயிரிழந்த சம்பவம் அப் பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .