மீனவர்கள் பல்வேறு வகையிலும் பாதிக்கப்படுவதாக வடமாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று(16) வல்வெட்டித்துறையில் உள்ள தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை புதிதாக பொறுப்பேற்ற கடற்றொழில் அமைச்சர் மீனவர் பிரச்சினையை வெறுமனே பார்வையிட்டுச் செல்வதாகவும் தெரிவித்ததுடன், இந்தியா சென்ற ஜனாதிபதி அனுர குமரா திசநாயக்கா மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் மீனவ பிரிதிநிதிகளுடன் பேசி தமது பிரச்சினைகளை அறிந்துகொண்டு செல்லவில்லை என்றும் தெரிவித்தார்.