வாத்துவ, பொதுப்பிட்டியவில் வீடொன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீயினால் வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ பரவியதையடுத்து, பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் சேர்ந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.
இந்தத் தீ விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீட்டின் பெண் ஒருவர் விளக்கை ஏற்றி விட்டுச் சென்றதால், அது கீழே விழுந்து தீப்பிடித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாத்துவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.