மாலம்பே பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை (04) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லேரியா பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடையவரே கைது செய்யப்பட்டவர் ஆவார்.
ADVERTISEMENT
மாலம்பே பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 13 கிராம் 320 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்ட 436,770 ரூபா பணம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மாலம்பே பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.