பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர் போத்தலேகம பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவர் ஆவார்.
மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் நேற்று புதன்கிழமை (04) காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து ஒரு மடிக்கணினி, ஒரு சைக்கிள் மற்றும் ஒரு கையடக்க தொலைபேசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சந்தேக நபர் கல்கிசை, தெஹிவளை, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி மற்றும் கொள்ளுப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.