நிக்கவெரட்டிய மானபாய பிரதேசத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் நேற்று சனிக்கிழமை (30) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் விஹாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடையவர் ஆவார்.
நிக்கவெரட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை நிக்கவெரட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.