நெல்லியடி பகுதியில் இடம் பெற்ற விபத்தில் ஹாட்லிக் கல்லூரி மாணவன் படுகாயமடைந்துள்ளான்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ADVERTISEMENT
தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்றுவிட்டு கற்றல் நிறைவடைந்த பின்னர் தனது துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த வேளை மாலிசந்தி பகுதியிலிருந்து புளியளி சந்தி நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும், மோதியதிலேயே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
காயமடைந்த மாணவனை உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சக மாணவர்கள் கொண்டுசென்றனர். அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.