
புதிதாக அமைக்கப்படவுள்ள மீன்பிடி வான் புனரமைத்தல் தொடர்பான கலந்துரையாடல் புதிதாக அமைக்கப்படவுள்ள மீன்பிடி வான் புனரமைத்தல் தொடர்பான கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (20.11.2024) காலை 09.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.புதிதாக அமைக்கப்படவுள்ள மீன்பிடி வான் புனரமைத்தல் மற்றும் ஏற்கனவே உள்ள மீன்பிடி வான் திருத்துதல் தொடர்பான விடயங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.மேலும் இது தொடர்பான உரிய அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் அதற்கான நிதியினை சிறந்த முறையில் பயன்படுத்துதல் தொடர்பாகவும் அரசாங்க அதிபர் அவர்களால் உரிய தரப்பிற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. க. ஸ்ரீமோகனன், தெல்லிப்பளை பிரதேச செயலாளர், கடற்றொழி்ல் திணைக்கள உதவிப் பணிப்பாளர், கரையோர பாதுகாப்புத் திணைக்கள பொறியியலாளர், மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர், தெல்லிப்பளை மற்றும் சங்கானை பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்கள், UNDP நிறுவன பிரதிநிதிகள் மற்றும் துறை சாா் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.