அமெரிக்க கடற்படையின் யு எஸ் எஸ் மைக்கேல் மர்பி கப்பலானது எரிபொருள் நிரப்பும் பயணமாக நேற்று (16)கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்தக் கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
ADVERTISEMENT
155.2 மீற்றர் நீளமுள்ள இந்த ஏவுகணை நாசகாரி கப்பல் 333 கடற்படையினரை கொண்டதுடன், கொமாண்டர் ஜொனாதன் பி. கிரீன்வால்ட் என்பவரால் நிர்வகிக்கப்படுகிறது.
இந்த நிலையில், நிரப்புதல் தேவைகளை நிறைவு செய்த பின், யு எஸ் எஸ் மைக்கேல் மர்பி கொழும்பில் இருந்து புறப்படவுள்ளது.