வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாளான சூர சங்காரம் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ இடம்பெற்றது.
நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 6:00 மணியளவில் சூர சங்காரம் இடம் பெற்றது. இதில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் நூற்றுக்கணக்கான அடியவர்கள் வருகை தந்திருந்தனர்.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதைவேளை வல்வெட்டித்துறை நகரசபை வாகனங்களுக்கான உள் நுழைவு கட்டணம் அறவிட்ட போதும் வாகனங்கள் தரிப்பதற்க்கு உரிய வசதிகள் மேற்கொள்ளப்படாமையால் வாகனங்கள் பல மணிநேரம் நெரிசலில் காணப்பட்டன.
![](https://thinakaran.com/wp-content/uploads/2024/11/IMG_20241107_170347-1024x478.jpg)
![](https://thinakaran.com/wp-content/uploads/2024/11/IMG_20241107_180342-1024x478.jpg)
![](https://thinakaran.com/wp-content/uploads/2024/11/IMG_20241107_175933-1024x478.jpg)
![](https://thinakaran.com/wp-content/uploads/2024/11/IMG_20241107_180724-1024x478.jpg)