புத்தளம், வென்னப்புவ, மிரிஸ்ஸகொட்டுவ பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பதிவு செய்யப்பட்ட இலக்கத் தகடு இல்லாத வாகனம் ஒன்றுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வென்னப்புவ பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ADVERTISEMENT
சம்பவத்தில் புத்தளம் லுணுவில மற்றும் மிரிஸ்ஸகொட்டுவ ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.