ஹித்தோகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அத்துருவெல்ல பிரதேசத்தில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளதாக ஹித்தோகம பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்டவர் ஹித்தோகம, அத்துருவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடையவர் ஆவார். இந்த கொலைச் சம்பவம் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரியவருகையில்,
கொலை செய்யப்பட்டவர் கடந்த 27 ஆம் திகதி அன்று நான்கு நபர்களுடன் இணைந்து மது அருந்திக்கொண்டிருந்த நிலையில் கொலை செய்யப்பட்டவருக்கும் மற்றுமொரு நபருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன்போது, சந்தேக நபர் கொலை செய்யப்பட்டவரின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 33 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹித்தோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related Posts
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து.!
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வளாகத்தில் இன்று புதன்கிழமை மாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாகப் பெருமளவிலான சொத்துக்களுக்குப் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதி முழுவதும்...
கொழும்பின் புறநகர் பகுதிகளில் 24 மணித்தியாலங்கள் நீர்வெட்டு.!
கொழும்பின் புறநகர் பகுதிகளில் இன்று புதன்கிழமை இரவு 8 மணி முதல் நாளை வியாழக்கிழமை இரவு 8 மணி வரை 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று...
சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு; பேருந்து விபத்து.!
அம்பாறை டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து ஒன்று வெல்லம்பிட்டி பகுதியில் இன்று (24) அதிகாலை 5.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. பேருந்து சாரதிக்கு ஏற்பட்ட திடீர்...
பொலிஸாருக்கு எதிராக வெடித்த போராட்டம்.!
கடந்த 22.06.2026 அன்று கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட பொழுது அதிவேகமாக மோட்டார் சைக்கிளினை செலுத்திய ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட வீதி விபத்தில்...
விபத்தில் சிக்கி பாதசாரி உயிரிழப்பு.!
புத்தளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தளம் - குருநாகல் வீதியில், புத்தளம் நகருக்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்....
சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் வாழ்த்து.!
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மலையக மாணவர்கள் உட்பட அனைவருக்கும் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்...
காரைதீவு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026ஆம் ஆண்டுக்கான மாணவர் ஆட்சேர்ப்பு ஆரம்பம்.!
இலங்கையின் திறன் மேம்பாட்டு துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் தொழிற்பயிற்சி அதிகார சபை (VTA), காரைதீவு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர் ஆட்சேர்ப்புக்கான...
காரில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்; பிரதான சந்தேகநபர் மற்றும் அவரது மனைவி கைது.!
தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள உயிரிழந்த பெண்ணின் காதலன்,...
மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா ஆரம்பம்.!
மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணியளவில் மருதமடு திருத்தல பரிபாலகர் அருட்பணி பெப்பி.சோசை அடிகளார், மற்றும்...
ராஜபக்ஷ குடும்பத்தைப் பழிவாங்குவதே திசைகாட்டி அரசின் ஒற்றை நோக்கம்.!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசால், ராஜபக்ஷ குடும்பத்தினர் அனைவரும் திட்டமிட்ட முறையில் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...










