யாழில் பிரபல வர்த்தகர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
யாழ் நகரப்பகுதிக்கு அண்மையிலுள்ள குறித்த நபருக்கு சொந்தமான களஞ்சியசாலையில் இரவு நேரம் மரம் ஒன்றில் ஏறி துாக்கில் தொங்க முற்பட்ட நிலையில் அயல்பகுதியில் உள்ளவர்களால் அவதானிக்கப்பட்டு அவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
களஞ்சியசாலை உள்ள காணியின் மரத்தில் யாரோ ஏறுவதை அவதானித்த அயலில் உள்ள இளைஞா்கள் திருடன் என நினைத்து பார்த்த போது அந்நபர் கழுத்தில் கயிற்றைக் கட்டி துாக்கில் தொங்க ஆயத்தமானதை பார்த்து உள்ளே சென்று அவரை காப்பாற்றிய போது அவர் களஞ்சியத்துக்கு சொந்தமான பிரபல வர்த்தகர் என தெரியவந்தது.
அண்மையில் களஞ்சியசாலைக்கு 12 வயது மதிக்கத்தக்க சிறுமியுடன் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்து தனது மகளை துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாக கத்திக் குளறி ஆர்ப்பாட்டம் செய்து வர்த்தகருடன் கடும் சண்மையிட்டுள்ளார்.
அச் சிறுமியும் தாயும் குறித்த வர்த்தகர் களஞ்சியசாலையில் தனிமையில் இருக்கும் போது அடிக்கடி வந்து செல்பவர்கள் என அயலவர்கள் மூலம் தெரியவந்துள்ளது.
அப் பெண்ணுடன் அந்தரங்க நடவடிக்கையில் ஈடுபட்ட வர்த்தகர் பெண்ணின் சிறுவயது மகளையும் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி இருக்கலாம் எனவும் இதன் காரணமாக குறித்த பெண் வர்த்தகரை அச்சுறுத்தி பெருமளவு பணத்தை தொடர்ச்சியாக பறித்து வந்திருக்கலாம் எனவும் அயலவர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றார்கள்.
இதன் தொடர்ச்சியாகவே வர்த்தகர் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது.