யாழ்ப்பாணம், தாவடிச் சந்தியில் வீதியோரமாக 5 தினங்கள் அநாதரவாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், காரின் இலக்கம் மற்றும் புகைப்படங்களை சேகரித்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ADVERTISEMENT
சகல கதவுகளும் பூட்டப்பட்டுள்ளமையால் காரைப் பொலிஸாரினால் எடுத்துச் செல்ல முடியவில்லை.
எனினும், ஐந்து தினங்களுக்கு முன்னர் இந்தக் காருடன் ஒரு பெண் காணப்பட்டார் எனக் கூறப்படுகின்றது. இருப்பினும் காரின் உரிமையாளர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.