குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மீன்பிடி படகுகள் இன்று திங்கட்கிழமை (21) காலை 7.30 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏனைய மீன்பிடி படகுகளில் தீ பரவாமல் இருப்பதற்கு அங்கிருந்த மீனவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்ததாகவும், தீப்பற்றி எரிந்த இரண்டு மீன்பிடி படகுகளும் குடாவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஜயந்த ஜயவெல்ல என்பவருக்குச் சொந்தமானது என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.