சர்வதேச நல்லொழுக்க தினத்தினை முன்னிட்டு வருடா வருடம் வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனமானது வறிய மக்களுக்கு பல்வேறு உதவி திட்டங்களை வழங்கி வருகின்றது.
அந்த வகையில் இன்றையதினம் வலிகாமம் மேற்கில் வாசிக்கும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வானது சங்கானை – வடபிரதேச நல்லொழுக்க சம்மேளன அலுவலகத்தில் நடைபெற்றது.
ADVERTISEMENT
சங்கானை பிரதேச செயலர் திருமதி கவிதா உதயகுமார் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டே இந்த உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.
