சந்நிதியான் ஆச்சிரமத்தின் மாதாந்த ஆன்மீக வெளியீடான ஞானச்சுடர் 321 ஆவது மலர் வெளியீடும், 865,000 ரூபா பெறுமதியான உதவி வழங்கல் நிகழ்வும் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் முன்னிலையில்
சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண் பாட்டுப் பேரவையின் தலைவரும், ஓய்வு நிலை அதிபருமான ஆ.சிவநாதன் தலைமையில், நேற்று 27/09/2024 காலை 10.30 தொடக்கம் 11.45 மணி வரை இடம் பெற்றது.
இந் நிகழ்வில், வெளியீட்டுரை, மதிப்பீட்டுரையினை ஆசிரியர் துரை கனேசமூர்த்தி நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து சிறப்பு பிரதிகளும் வழங்கிவைக்கப்பட்டன.அத்துடன் யா/ பொற்பதி றோமன் கத்தோலிக்க தமிழ்கலவன் பாடசாலையின் கோரிக்கைக்கு அமைவாக,
230,000 ரூபா பெறுமதியான நிழற்பிரதி இயந்திரமும்,
புலோலி தென்மேற்கு மூத்தோர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக, மூத்தோர் தினத்தை முன்னிட்டு 60,000 ரூபா பெறுமதியான 300 கிலோகிராம் அரிசியும், ரூபா 25,000. நிதியும் வழங்கப்பட்டதுடன்
வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் யாழ் மாவட்ட அலுவலகத்தின் கோரிக்கைக்கு அமைவாக,
மூத்தோர் தினத்தை முன்னிட்டு ரூபா 50,000 பெறுமதியான 25 சாரம், 25 சேலைகளும் வழங்கப்பட்டன.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் விநாயகர் ஆலய கட்டிட பணிக்காக ரூபா 500,000 நிதியும் ஆலய நிர்வாகத்தினரிடம் வழங்கப்பட்டது.
இதேவேளை திருகோணமலை பெரியகடை ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் கட்டிட கட்டுமானப் பணிக்கான நிதியாக ரூபா 100,000 நிதி கடந்த 25/09/2024 அன்று ஆலய பரிபாலன சபையிடம் கையளிக்கப்பட்டது.
25/09/2024 ந்திகதி புதன்கிழமை நண்பகல் 12.15 மணியளவில் ஆலயத்தில் வைத்து வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள், சந்நிதியான் ஆ்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் நிர்வாகிகள், உறுப்பினர், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள் அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.