குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவியை பொல்லு ஒன்றால் அடித்து கொலை செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (26) மாலை ஹபரணை, பலுகஸ்வெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
ADVERTISEMENT
எப்பாவல பலுகஸ்வெவ பிரதேசத்தில் வசிக்கும் 63 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலையை செய்த 66 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.