களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வஸ்கடுவ பகுதியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (26) பிற்பகல் மஹவயிலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ADVERTISEMENT
வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.