யாழ்ப்பாணம் – சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் பகுதியில் உள்ள விடுதியொன்றில் இருந்து மூன்று கிலோ கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (15.08.2024) பிற்பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்புப் பகுதியைச் சேர்ந்த மேற்படி சந்தேக நபர் நுணாவில் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த வேளையிலேயே இவ்வாறு கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.