இனமத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும், உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையிலும் யாழில் இருந்து இளைஞன் ஒருவர் நடைபயணம் ஒன்றினை நேற்று மாலை ஆரம்பித்துள்ளார்.
சிவானந்தன் பவிஸ்ரன் என்ற இளைஞனே இன்றையதினம் யாழ். நல்லூர் ஆலயத்தில் இருந்து இந்த நடைபயணத்தை ஆரம்பித்துள்ளார்.
ADVERTISEMENT
இவர் இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களுக்கும் நடந்தே தனது பயணத்தை முன்னெடுக்கவுள்ளார். அத்துடன் மாவட்டங்களின் முக்கிய இடங்களில் மரக் கன்றுகளையும் நாட்டவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

