மத்தேகொடை பிரதேசத்தில் உள்ள பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக மத்தேகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தின் போது முச்சக்கரவண்டி ஒன்றும், இரண்டு மோட்டார் சைக்கிள்களும் காரொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.
ADVERTISEMENT
இந்த விபத்தின் போது, மோட்டார் சைக்கிள்களின் செலுத்துநர்கள் இருவரும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.