பலாங்கொடை பெட்டிகள பிரதேசத்தில் வீடொன்றின் குளியலறையில் இருந்து பாடசாலை மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உறவினர்கள் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய பலாங்கொடை பொலிஸாரால் குறித்த மாணவியின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவி பலாங்கொடை பிரதேசத்தில் பிரபல தமிழ்ப் பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்பில் கல்வி கற்றவர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.