சுதந்திர தினத்தை கரி நாளாக கடைப்பிடிக்கும் முகமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
இலங்கையின் 76 வது சுதந்திர தினத்தை தமிழர் பிரதேசங்களில் கரி நாளாக வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
ADVERTISEMENT
இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கொடிக்கம்பத்தில் மாணவர்களால் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளதுடன் பல்கலைக்கழக சூழலில் கறுப்பு கொடிகளும் கட்டப்பட்டுள்ளன.