• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 18, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

உல்லாசத்திற்கு இடையூறு!! இரண்டு குழந்தைகளை கொன்ற தம்பதிக்கு மரண தண்டனை!

Thinakaran by Thinakaran
February 1, 2024
in உலக செய்திகள்
0
Share on FacebookShare on Twitter

தொடர்மாடி குடியிருப்பிலிருந்து ஜன்னல் வழியாக இரண்டு குழந்தைகளை கீழே எறிந்து கொன்ற சீன தம்பதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதிய குடும்ப வாழ்க்கையை ஆரம்பிக்கும் எதிர்பார்ப்பில், குழந்தைகளை ஜன்னல் வழியாக வீசி எறிந்த குற்றத்திற்கு ஷாங் போ (Zhang Bo) மற்றும் அவரது காதலி யே செங்சென் (Ye Chengchen) ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

சீனா உச்ச நீதிமன்றம் அவர்களின் மரண தண்டனையை அங்கீகரித்து, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மரண ஊசி மூலம் தண்டிக்கப்பட்டதாக China Daily தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டில், ஷாங் தனது இரண்டு குழந்தைகளை 15 ஆவது மாடியில் இருந்து ஜன்னலுக்கு வௌியே வீசியதற்காகவும் யே செங்சென் தனது காதலனை குழந்தைகளைக் கொல்லும்படி தூண்டிய குற்றத்திற்காகவும் மரண தண்டனைக்கு உள்ளாகினர்.

ஷாங்கிற்கு தனது முன்னாள் மனைவி மூலம் இரண்டு வயது பெண் குழந்தையும் ஒரு வயது ஆண் குழந்தையும் இருந்தனர். இந்நிலையில், அக்குழந்தைகள் தமக்கு இடையூறாக இருப்பதாகக் கருதிய யே செங்சென், அவர்களை விட்டு வரும்படி ஷாங்கை வற்புறுத்தியுள்ளார்.

தனக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதை மறைத்து ஷாங், யே செங்சென்னுடனான உறவை ஆரம்பித்ததாக New York Post தெரிவித்துள்ளது.

ஷாங் தனது முன்னாள் மனைவி சென் மெய்லினை (Chen Meilin) 2020 ஆம் ஆண்டில் விவாகரத்து செய்துள்ளார். இதனையடுத்து, Ye Chengchen குழந்தைகளை விட்டுவிட்டு வரும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

குழந்தைகளை தூக்கி எறிந்த பின்னர் ஷாங் பெரும் துன்பத்திற்கு ஆளானதையும் தலையில் சுவரை மோதி அழுவதையும் சீன ஊடகங்களில் வௌிவந்த காணொளியில் காண முடிந்தது.

எனினும், தனது பிள்ளைகள் கீழே வீழ்ந்த போது, தான் உறங்கிக்கொண்டிருந்ததாகவும் மாடியின் கீழ் தளத்தில் இருப்பவர்களின் சத்தத்தை கேட்டு கண் விழித்து பார்த்ததாகவும் ஷாங் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

தனது குழந்தைகளுக்கு நேர்ந்த கதியைக் கேட்டு அதிர்ச்சியடைந்ததாக அக்குழந்தைகளின் தாயான சென் மெய்லின் குறிப்பிட்டுள்ளார்.

ஷாங் மற்றும் யே செய்த குற்றச்செயல் சீனாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், அவர்களுக்கு கடந்த புதன் கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சீன சமூக ஊடகமான Weibo-வில் வௌியான செய்தி 200 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

Tags: இடையூறு!!இரண்டுஉலகஉல்லாசத்திற்குகுழந்தைகளைகொன்றசெய்திகள்தண்டனைதம்பதிக்குமரண

Related Posts

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சி!

by selvan
June 17, 2026
0

உலகளாவிய எரிசக்தி சந்தையில் இன்று (17) மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகளில் மாற்றங்கள் பதிவாகியுள்ளன.சர்வதேச சந்தை நிலவரங்களின்படி, WTI (West Texas Intermediate) ரக...

பாகிஸ்தானில் 4 இல் ஒரு வீட்டில் சிறுவர் தொழிலாளர்கள்!

பாகிஸ்தானில் 4 இல் ஒரு வீட்டில் சிறுவர் தொழிலாளர்கள்!

by selvan
June 17, 2026
0

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் சிறுவர் வீட்டுத் தொழிலாளர்களைத் தடுப்பதற்கான சட்டங்கள் 2020 ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலிருந்த போதிலும், தற்போதும் அங்குள்ள ஒவ்வொரு நான்கு வீடுகளிலும் ஒரு...

வெள்ளை மாளிகையில் தாக்குதல் சதி முறியடிப்பு – பலர் கைது!

வெள்ளை மாளிகையில் தாக்குதல் சதி முறியடிப்பு – பலர் கைது!

by selvan
June 17, 2026
0

வெள்ளை மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற யு.எஃப்.சி (UFC) தற்காப்புக் கலை விளையாட்டை இலக்கு வைத்து திட்டமிடப்பட்டிருந்த சதி முயற்சியை முறியடித்துள்ளதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ...

அமெரிக்காவின் முற்றுகைப் பகுதியை விட்டு வெளியேறின ஈரானிய எண்ணெய்த் தாங்கிக் கப்பல்கள்!

அமெரிக்காவின் முற்றுகைப் பகுதியை விட்டு வெளியேறின ஈரானிய எண்ணெய்த் தாங்கிக் கப்பல்கள்!

by selvan
June 17, 2026
0

கடந்த இரண்டு மாதங்களில் முதன்முறையாக, சுமார் 5 மில்லியன் பீப்பாய் மசகு எண்ணெய்யை ஏற்றிச் சென்ற குறைந்தது மூன்று ஈரானிய எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை...

லெபனான் விடயத்தை இஸ்ரேல் கையாளும் விதம்  தொடர்பில் ட்ரம்ப் அதிருப்தி!

லெபனான் விடயத்தை இஸ்ரேல் கையாளும் விதம்  தொடர்பில் ட்ரம்ப் அதிருப்தி!

by selvan
June 17, 2026
0

லெபனான் தொடர்பான விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அதிக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள இராணுவ...

உலகில் 1.8 பில்லியன் சிறுவர்கள் வறட்சியால் பாதிப்பு : யுனிசெப் அறிக்கை!

உலகில் 1.8 பில்லியன் சிறுவர்கள் வறட்சியால் பாதிப்பு : யுனிசெப் அறிக்கை!

by selvan
June 17, 2026
0

உலகில் உள்ள ஒட்டுமொத்த சிறுவர்களில் பெரும்பாலானோர் ஏதேனும் ஒரு காலநிலை ஆபத்தை எதிர்கொண்டுள்ளதுடன், வறட்சியின் காரணமாக மாத்திரம் சுமார் 1.8 பில்லியன் சிறுவர்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய...

கனடா செல்லும் பயணிகளுக்கு அமெரிக்கா அவசர எச்சரிக்கை!

கனடா செல்லும் பயணிகளுக்கு அமெரிக்கா அவசர எச்சரிக்கை!

by selvan
June 17, 2026
0

கனடாவின் மனிடோபா மாகாணத்தில் ஹெபடைடிஸ் ஏ நோய் வேகமாகப் பரவி வருவதையடுத்து, அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) அப்பகுதிக்குச் செல்லும் பயணிகளுக்கு நிலை-1...

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

by selvan
June 17, 2026
0

சீனாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள கிங்ஹாய் மாகாணத்தின் ஹைசி மாவட்டத்தில் 6.3 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சீன நிலநடுக்க நெட்வொர்க் மையத்தின் தகவலின்படி, இந்த...

அமெரிக்கா உடன்படிக்கையை மீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் – ஈரான் எச்சரிக்கை!

அமெரிக்கா உடன்படிக்கையை மீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் – ஈரான் எச்சரிக்கை!

by selvan
June 17, 2026
0

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக கையெழுத்தாகவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையை அமெரிக்கா மீறினால், அதற்கு  தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானிய...

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்!

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்!

by selvan
June 16, 2026
0

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நேற்று பயங்கர தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கீவ் நகரம் முழுவதும் சக்திவாய்ந்த குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டபடி இருந்தது. பாலிஸ்டிக்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி