கட்டார் நாட்டில் தொழில் நிமிர்த்தம் சென்று 26 ஆம் நாளில் வாகன விபத்தில் அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது
நவக்கிரியை சொந்த இடமாக கொண்ட குறித்த இளைஞர் அல்வாய் மனோகரா பகுதியில் மூன்று வருடங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்துள்ளார்
ஒரு பெண் பிள்ளையின் தந்தையான குறித்த இளம் குடும்பஸ்தர் தொழில் நிமிர்த்தம் கட்டார் நாட்டுக்கு சென்று வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்
சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த டிபில்ஸ்குமார் துவிகரன் வயது 24 என்ற ஒரு பெண் பிள்ளையின் தந்தையை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்
சடலம் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இன்றைய தினம் இறுதிக்கிரியைகள் இடம் பெற்று தகனம் செய்யப்படவுள்ளது இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது