2024-ல் சூர்யா நடிப்பில் திரைக்கு வரும் இரண்டு படங்கள்!

94

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சூர்யா. இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வருகிற ஜூன் மாதத்தில் திரைக்கு வர உள்ளது. இதையடுத்து சுதா இயக்கும் தனது 43வது படத்தில் நடிக்கப் போகிறார் சூர்யா. அந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இது அவரது நூறாவது படமாகும்.

surya 9880090090980

இந்நிலையில் இப்படம் குறித்து ஜி.வி .பிரகாஷ் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், சுதா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 43வது படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தை 2024ம் ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பரில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அதனால் இந்த ஆண்டில் சூர்யா நடிப்பில் இரண்டு படங்கள் திரைக்கு வருவது உறுதியாகி இருக்கிறது. மேலும், சுதா இயக்கும் தனது 43வது படத்தில் நடித்து வரும் போதே ஹிந்தியில் உருவாகும் கர்ணா படத்திலும் நடிக்க போகிறார் சூர்யா.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.