17 வயது சிறுமியும் 30 வயது காதலனும் செய்த மோசமான செயல்..!

216

வாதுவை – பொஹத்தரமுல்ல கடற்கரை பகுதியில் போதைப்பொருளுடன் 17 வயது சிறுமியும் அவரது 30 வயதான காதலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வாதுவை பிரதேசத்தை சேர்ந்த 17 வயது சிறுமி மற்றும் 30 வயது இளைஞராவர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில் சந்தேக நபர்களிடமிருந்து 20 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபரான சிறுமி ஹொரணை பிரதேசத்தில் மேலதிக வகுப்பொன்றில் கலந்து கொண்டு மீண்டும் வீடு திரும்பிய நிலையில் தனது காதலனான 30 வயது இளைஞருக்காக போதைப்பொருளை பாதுகாப்பாக தன்வசம் வைத்திருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களா என பரிசோதிப்பதற்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் பாணந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.