14 வயது சிறுமி தொடர் துஷ்பிரயோகம் ; 80 வயதுடைய பாட்டனார், உறவுமுறையான இருவர் கைது!! மேலும் இருவரிற்கு வலைவீச்சு

14

மொரகஹஹேன பிரதேசத்தில் 14 வயது சிறுமியை தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுமியின் பாட்டனார் உள்ளிட்ட குடும்ப உறவினர்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தில் சிறுமியின் 80 வயதுடைய பாட்டனாரும் உறவுமுறையான இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரின் பராமரிப்பின்றி ஹொரண மொரகஹஹேன பிரதேசத்தில் தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் சித்தப்பா முறையான ஒருவரும் பாடசாலை மாணவன் ஒருவரையும் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்தனர்.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.