வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து

வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார்க் கடையினுள் புகுந்தது ஏ-35 பிரதான விதியின் புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த கார் ஒன்று இன்றைய தினம் மாலை 5.40 மணியளவில் விசுவமடு பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை முந்தி செல்ல முற்பட்ட கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து அருகிலே இருந்த கடையின் முன்பகுதியில் நிறுத்தி பொருட்கள் கொள்வனவு செய்வதற்கு வந்த வாடிக்கையாளர்கள் நிறுத்தி வைத்திருந்த இரண்டு மோட்டார் சைக்கிள் , ஒரு துவிச்சக்கரவண்டி மற்றும் முச்சக்கரவண்டி என்பனவற்றை மோதி தள்ளி கடையினுள் புகுந்தது.

1707157010500

1707157010548
1707157010446
1707157010643
1707157010681
இவ்விபத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை. இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் காரின் கீழ்ப்பகுதியில் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள் ,துவிச்சக்கர வண்டி என்பனவற்றையும் மீட்டுள்ளனர்.

Comments are closed.