வெளிநாட்டு அழகி தங்கியிருந்த வீட்டில் திருடன் செய்த வேலை-மக்களினா உதவியை நாடும் பொலிசார்..!

182

சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

வெளிநாட்டு பெண் ஒருவர் தங்கியிருந்த வீட்டிற்குள் நுழைந்த சந்தேகநபர் அவரது பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண்ணின் 760,000 ரூபாய் பணம், இரண்டு ATM அட்டைகள் உள்ளிட்டவை சந்தேகநபரால் கொள்ளையிடப்பட்டுள்ளன.

சந்தேகநபரை கைது செய்வதற்காக ஹிக்கடுவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேகநபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் கீழுள்ள தொலைப்பேசி இலக்கங்களுக்கு அழைத்து அறிவிக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரியுள்ளனர்.

ஹிக்கடுவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி – 071 – 8591457
ஹிக்கடுவை பொலிஸ் நிலையம் – 091 – 2277222

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.