வெடுக்குநாறிமலை பூசாரி வைத்தியசாலையில் அனுமதி.

147

வெடுக்குநாறி மலையின் பிரதான பூசாரியான தம்பிராசா மதிமுகராசா சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று பொலிசாரின் வன்முறையால் ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் கடந்த 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த எட்டுப்பேரையும் விடுதலைசெய்து வவுனியா நீதிமன்று நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் விடுதலையான ஆலயத்தின் பூசாரியார் சுகவீனமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி 5 நாட்கள் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெடுக்குநாறிமலை பூசாரி வைத்தியசாலையில் அனுமதி. - Veeramurasu Breaking News வெடுக்குநாறிமலை பூசாரி வைத்தியசாலையில் அனுமதி. - Veeramurasu Breaking News

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.