விபத்தை ஏற்படுத்தி ரயிலை சேதமாக்கிய வெள்ளையருக்கு நீதிமன்று கொடுத்த அதிரடி தீர்ப்பு..!

ரயில் வருவதை பொருட்படுத்தாமல் காரைச் செலுத்தி ரயில் கடவையைக் கடக்க முற்பட்டு கடவையையும் ரயிலையும் சேதப்படுத்திய ரஷ்ய சுற்றுலா பயணிக்கு  காலி மேலதிக நீதவான் லக்மினி விதானகமகே அபாரதம் விதித்துள்ளார்.

அதன்படி, ஏற்பட்ட சேதங்களுகாக ரயில் திணைக்களத்திற்கு  1.78 மில்லியன் ரூபாவும், போக்குவரத்து விதிமீறலுக்கு 56,000 ரூபாவும்  செலுத்துமாறு உத்தரவிடப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி பெலியத்தவில் இருந்து மஹோ நோக்கிச் சென்ற ரயில் மீதும் கடவை மீதும் காரை மோதி சேதத்தை ஏற்படுத்தினார்.

இதனையடுத்து காரில் பயணித்த ரஷ்யப் பிரஜையும் மற்றவரும் காயமடைந்து கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவ்விபத்தில் ரயில் இயந்திரம் மற்றும் ரயில் சமிக்ஞை அமைப்பு பெருமளவில் சேதமடைந்தது.

இந்நிலையில், போக்குவரத்து விதிகளின் கீழ் சுற்றுலாப் பயணிக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுத்ததோடு, ரயில் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு ரயில் திணைக்களம் இழப்பீடு கோரியிருந்த்து.

அஹங்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நாலக ஜயவீர மற்றும் எஉதவிப் பொலிஸ் பரிசோதகர் சந்தன ஆகியோர் அரச தரப்பில் சமர்ப்பணங்களை முன்வைத்ததுடன், சந்தேக நபருக்காக சட்டத்தரணிகளான பாமுதி வீரசூரிய மற்றும் சிசிர வீரசூரிய ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

Comments are closed.