வாகாரையிலும் காணி உரிமங்கள் வழங்கி வைப்பு..!{படங்கள்}

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் காணி  உறுதி வழங்கி வைக்கும்  நிகழ்வு வாகரை பிரதேச செயலாளர்  எந்திரி ஜீ.அருணன் தலைமையில்  பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இன்று (28) திகதி இடம் பெற்றது.

ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவில் உதித்த உரிமை வேலைத்திட்டத்தின் கீழ் அளிப்பு, பூரண அளிப்பு மற்றும் காணி அனுமதிப்பத்திரங்கள் என்பன தேசிய ரீதியில் வழங்கப்பட்டு வரும் நிலையில், இன்று வாகரையில் இடம்பெற்ற காணி உரிமங்கள் வழங்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.

மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இடம் பெற்ற நிகழ்வில் 150 பூரண அளிப்புக்களும் 400  காணி அனுமதிப்பத்திரங்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி.ஜஸ்டினா முரளிதரன், மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரின் பிரத்தியேக செயலாளர் த.தஜீவரன், உள்ளிட்ட ஆளுநரின் உத்தியோகத்தர்கள், பிரதே செயலக உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

IMG 20240229 WA0112 IMG 20240229 WA0117 IMG 20240229 WA0105 IMG 20240229 WA0111

Comments are closed.