வவுனியாவில் தொடர் கொள்ளயைில் ஈடுபட்ட இருவரை மடக்கி பிடித்த பொலிசார்..!

176

வவுனியாவில் பல்வேறு இடங்களில் 30 இற்கும் மேற்பட்ட திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர்  நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது வவுனியா, வாரிக்குட்டியூர் மற்றும் சமயபுரம் பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்த போதே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது நீர் இறைக்கும் மோட்டர்கள், குழாய் கிணற்று மோட்டர்கள், சிலிண்டர்கள், மின் விசிறிகள், கிறைண்டர்கள் என பல பொருட்கள் மீட்கப்பட்டதுடன் 30 இற்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்களுடன் அவர்கள் இருவரும் தொடர்புடையவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த இருவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.