வடக்கு மாகாணத்தில் அனைத்து தனியார் பேரூந்து சேவைகளும் முற்றாக இடைநிறுத்தம்-பயணிகள் அந்தரம்..!{படங்கள்}

69

வடக்கு மாகாணத்தில் அனைத்து தனியார் பேரூந்து சேவைகளும் முற்றாக இடைநிறுத்தம்!

யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் உள்ளூர் மற்றும் நெடுந்தூர தனியார் பேரூந்து சேவைகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

அத்தோடு யாழ்ப்பாணத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு சேவையில் ஈடுபடும்  பேரூந்துகள், அத்தோடு வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நேறையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ளூர் தனியார் பேரூந்து சேவைகள் சேவையை முன்னெடுத்த நிலையில் நொடுந்தூர பேரூந்து சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டிருந்தன.

ஆனால் இன்றையதினம் உள்ளூர் மற்றும் நெடுந்தூர பேரூந்து சேவைகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் நேற்று(28) முதல் தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என

வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தலைவர் சி.சிவபரன் நேற்று முன்தினம்(27) ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில் இரண்டாவது நாளாகவும் தனியார் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.

20240229 071531 20240229 071147 20240229 071105

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.