ரூ.100 கோடியைத் தாண்டிய ஜோதிகாவின் ‘சைத்தான்’ திரைப்படம்!

108

தமிழில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது தமிழ், மலையாளம், ஹிந்தியில் நடித்து வருகிறார்.

ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான காதல் தி கோர் என்ற மலையாளத் திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பினைப் பெற்றது.

அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான ‘சைத்தான்’ படத்தில் மாதவன், ஜோதிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். நீண்ட இடைவேளைக்குப் பின் நடிகை ஜோதிகா பாலிவுட் படத்தில் நடித்தார்.

ஹாரர் பாணி படமாக உருவான சைத்தான் கடந்த மார்ச்.8ஆம் தேதி வெளியானது.

இந்நிலையில் உலகம் முழுவதும் சைத்தான் படம் ரூ. 117.47 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஹிந்தியில் இணையத்தொடர் ஒன்றிலும் ஜோதிகா நடித்துள்ளார்.

24 65ef82475ac9b

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.