யுத்த காலத்தில் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடியலைந்த அறுவருக்கு நேர்ந்த கதி..!

96
யுத்த காலத்தில் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தங்கம் மற்றும் சொத்துக்களை 5ம் வட்டாரம் இரணைபாலை புதுக்குடியிருப்பில் உள்ள தென்னை தோட்டத்தில் தோண்டிய போது 06 பேர் நேற்று பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  ஹேரத்துக்கு கிடைத்த தகவலின்படி, இரணைபாலை பிரதேசத்தில் யுத்தத்தின் போது புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தங்கம் மற்றும் சொத்துக்களை தேடும் நோக்கில் அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்த 06 நபர்களை புதுகுடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹேரத் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
குறித்த  இடத்தில் தண்ணீர் எடுப்பதற்காக கட்டப்பட்ட கிணற்றின் அருகில் 03 அடி நீளமும் 06 அடி ஆழமும் கொண்ட குழி தோண்டிக்கொண்டிருந்தது
சந்தேக நபர்களும் அவர்களது சொத்துக்களும் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
நெடுங்கேணி,மதவாச்சி,பதவியா,தெய்நதர, ஹக்மான போன்ற பகுதிகளை சேர்தவர்களே. இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் சான்று பொருட்களையும்  இன்றையதனம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.