யாழில் கட்டிடம் அமைக்க நிலத்தை தோண்டியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

245

யாழில் கட்டிடம் அமைப்பதற்கு இன்றையதினம் கிடங்கு வெட்டிய போது கைக்குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ் நாவற்குழியில் அமைந்துள்ள திருவாசக அரண்மனையில் புதிய கட்டிடம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கமைய நிலத்தை தோண்டிய போது நிலத்தின் கீழ் கைக்குண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் சாவகச்சேரி பொலிஸாருக்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, குறித்த பகுதியில் மேலும் குண்டுகள் ஏதும் இருக்கலாம் என்ற அச்சம் காரணமாக நிலத்தை தோண்டும் பணிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.