யானையின் சடலம் மீட்பு-உரிமையாளர் கைது

166

வவுனியா புளியங்குளம், பழையவாடியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான பண்ணைகாணியில் இருந்து யானை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம்(08) குறித்த காணியில் யானை ஒன்று சடலமாக கிடப்பதை அவதானித்த காணியின் உரிமையாளர் புளியங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்ததால்
அதற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற புளியங்குளம் பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையின் இறப்பு தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

உயிரிழந்த யானை24 வயது மதிக்கத்தக்கது எனவும் சடலம் இன்று உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில், அக்காணியின் உரிமையாளர் புளியங்குளம் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.