மேலதிக வகுப்புக்கள் நடத்திய அதிபர் ஆசிரியர்களுக்கு நேர்ந்த கதி..!

26

மத்திய மாகாணத்தில் மாணவர்களுக்கு  கட்டணம் அறவிடப்பட்டு நடத்தப்படும் மேலதிக வகுப்புக்களுக்குத் தடை விதித்திருந்த போதிலும்  அதையும் மீறி சொந்த வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகளை ஏற்பாடு செய்யதாகக் கூறும் மேற்படி மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் அதிபர் உட்பட 58 ஆசிரியர்களை வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்ய மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

கினிகத்தேன ஆரம்பப் பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர், ஆசிரியர்களுக்கு வழங்கிய சுற்றறிக்கை தமக்கு செல்லுபடியாகாது எனக் கூறி, பணத்திற்காக தனது பாடசாலையின் பிள்ளைகளுக்கு மேலதிக வகுப்புகளை நடாத்தியுள்ளதாகவும்,  மேலும்  மற்றுமொருவரும் அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மத்திய மாகாண சபையின் கீழ் இயங்கும் கண்டி மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் உள்ள பிரபல பாடசாலைகளின் ஆசிரியர்கள் சிலருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மாகாண கல்விச் செயலாளர் மேனகா ஹேரத்தின் பணிப்புரையின் பேரில் விசேட சுற்றிவளைப்பு பிரிவு ஒன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

சுற்றறிக்கைக்கு எதிராகவும், பெற்றோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாகவும் மேலதிக வகுப்புகளை நடத்துகின்றனர்.அதிக வகுப்புகள் நடத்தப்படும் இடங்களைச் சம்பந்தப்பட்ட பிரிவின் குழுவொன்று அவதானித்து, அது தொடர்பான அறிக்கையின் அடிப்படையில், மாகாண கல்வி அமைச்சு  விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது.

பாடசாலை மட்டத்தில் வினாத்தாள் தயாரிப்பில் மேலதிக வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்கள் தங்களின் வகுப்புகளுக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு அதிக புள்ளிகளை வழங்குவதாகவும் பிள்ளைகளின் பெற்றோருக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் கடந்த காலங்களில் கல்வி அமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுமை தெரிந்ததே.

பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகளை சொந்த வகுப்புகளில் நடத்தும் ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே மாகாண கல்வி அமைச்சுக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தகதாகும்.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.