முல்லைத்தீவு மாவட்ட செயலக மேலதிக மாவட்ட அரசாங்க அதிபராக ஜெயகாந்த் நியமனம்..!{படங்கள்}

161

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபராக (காணி) சி.ஜெயகாந்த் கடமையினை பொறுப்பேற்றுள்ளார்.

2006ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவை நியமனத்தில் இலங்கை நிர்வாக சேவை முதலாம் வகுப்பை பெற்று பிரதேச செயலாளராகவும்,உதவி அரசாங்க அதிபராகவும் பணியாற்றி இருக்கின்றார்.

அத்தோடு யாழ்ப்பாணம், முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் 17 வருடங்களுக்கு மேலாக உதவி அரசாங்க அதிபாராகவும், பிரதேச செயலாளராகவும் கடமையாற்றி பொது மக்கள் மனதில் சிறந்த பிரதேச செயலாளராக இடம்பிடித்து ,தற்போது மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபராக ( காணி) பதவி உயர்வு பெற்று தனது கடமையினை 01.03.2024 அன்றிலிருந்து பொறுப்பேற்று கொண்டுள்ளார்.

இவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைமானி பட்டத்தையும், யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் வர்த்தகமானி( பட்டத்தையும் முதலாம் தரத்தில் பெற்றும், ஸ்ரீ ஜெயவர்த்தன பல்கலைக்கழகத்தில் MPA பட்டத்தையும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் MA பட்டத்தையும் பெற்ற பெருமைக்குரியவர்.

அத்தோடு முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளர் ஒருவரை நியமிக்கும் வரை பதில் பிரதேச செயலாளராக புதுக்குடியிருப்பு பிரதேச மக்களுக்காக பிரதேச செயலகத்தில் பணியாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
IMG 20240305 WA0046

IMG 20240305 WA0032

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.