முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்பினர்கள் சிலர் ரி.ஐ.டியினரால் விசாரணைக்கு அழைப்பு.

114

முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்பினர்கள் சிலர் ரி.ஐ.டியினரால் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

இன்றையதினம் (21.03.2024) முல்லைத்தீவிற்கு வருகை தந்த விஷேட ரி.ஐ.டி குழுவினர் முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஒழுக்காற்று தலைவரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ள அதேநேரம் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை நாளையதினம் (22.03.2024) விமான நிலையத்தில் அமைந்துள்ள ரி.ஐ.டி அலுவலகத்திற்கு சமூகம் தருமாறு அழைப்பு கடிதத்தினை குறித்த தரப்பினரிடம் வழங்கியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்பினர்கள் சிலர் ரி.ஐ.டியினரால் விசாரணைக்கு அழைப்பு. - Veeramurasu Breaking News

குடிவரவு குடியகல்வு தொடர்பான குற்றம் ஒன்றில் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த நபர்களை விசாரணைக்காக அழைக்கப்படிருக்கலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.