முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் பச்சிளம் குழந்தை கொலையின் பிண்ணனி

325

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் பச்சிளம் குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் மதபோதகர் ஒருவர் மூவர் நேற்று புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கடந்த (15) இரவு குழந்தையை பெற்றெடுத்த நிலையில் பிள்ளையை கொலை செய்துள்ள பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த பெண்ணுடன் மூவரை கைது செய்துள்ளனர்

இந்நிலையில் சந்தேகநபரான மதபோதகர் திருகோணமலையை வசிப்பிடமாக கொண்டதுடன் அவர் வாராந்தம் முல்லைத்தீவிற்கு வந்து மதபோதனை செய்பவர் என தெரிவிக்கப்படுகிறது.

குழந்தையை கொலை செய்த பெண்ணும் சந்தேகநபரான மதபோதகரும் தவறான உறவில் ஈடுபட்டதன் காரணமாகவே குழந்தை பிறந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.