முல்லைத்தீவிலும் போராட்டம்..!{படங்கள்}

31

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட புதுக்குடியிருப்பு மேற்கு கிராம அலுவலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுண்ணாம்புசூளை வீதி திருத்தப்பணிகளுக்கு  ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை மக்கள் விருப்பத்துக்கு மாறாக  மாற்றியதை எதிர்த்து மக்கள் இன்று (19) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திககாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 115 மில்லியன் நிதியில் 22.5 மில்லியன்  புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு ஒதுக்கப்பட்டது

இந்நிலையில் குறித்த நிதியினை என்னென்ன தேவைக்கு பயன்படுத்துவது என கிராமங்களில் மக்கள் பொது அமைப்புக்களை இணைத்து கலந்துரையாடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

இந்நிலையில் புதுக்குடியிருப்பு மேற்கு கிராம அலுவலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் மக்களை இணைத்து கூட்டம் நடத்தியபோது மக்கள் அனைவரும் இணைந்து தமது பகுதிக்கு ஒதுக்கப்பட்ட 17 இலட்சம் ரூபா நிதியை சுண்ணாம்புசூளை வீதி திருத்த பணிக்கு ஒதுக்க தீர்மானிக்கப்பட்டது

இந்நிலையில் மக்களால்  தீர்மாணம் நிறைவேற்றிய பின்னர் குறித்த  நிதி வேறு தேவைக்காக மாற்றியதாக புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது

இந்நிலையில் புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் மக்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர் எங்களை அழைத்து தீர்மானித்து விட்டு நீங்கள் மாற்றுவதாக இருந்தால் ஏன் எங்களை அழைத்து கூட்டம் நடத்தினீர்கள் ஆகவே மக்களால் தீர்மானிக்கப்பட்ட வீதியை திருத்த குறித்த நிதி பயன்படுத்தப் படவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்

இந்நிலையில் குறித்த விடயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த நிதியில் எமது வீதியை புணரமைக்க வேண்டும் அந்த நிதி வேறு தேவைக்கு மாற்றக்கூடாது என வலியுறுத்தி குறித்த புதுக்குடியிருப்பு மேற்கு கிராம அலுவலர் பிரிவு மக்கள் இன்று (19) காலை புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்

புதுக்குடியிருப்பு சமூர்த்தி வங்கி முன்பாக இருந்து கவனயீர்ப்பு பேரணியாக சென்ற மக்கள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக வாசல் வரை சென்று அங்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி திட்டமிட்டபடி தமது வீதியை புணரமைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்

குறித்த மக்களுடன் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சி.ஜெயகாந் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துரையாடி மக்களது கோரிக்கை தொடர்பாக மாவட்ட செயலாளர் அவர்களுடனும் கலந்துரையாடி நல்ல தீர்வு பெற்றுத்தருவதாக உறுதியளித்தார் .

received 360807340089733 received 2062453884087607 received 704608771742924 received 1331215994209427 received 763129148685636

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.