முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் பயணித்த வாகனம் விபத்து…!{படங்கள்}

136

முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் பயணித்த வாகனம் முள்ளிவாய்க்கால் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (07.03.2024) மாலை இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த கார் முள்ளிவாய்க்கால் பகுதியில் சென்று கொண்டிருந்த போது காரின் சில்லுக்கு காற்று குறைவடைந்ததன் காரணமாக திடீரென வீதியை விட்டு விலகி சென்று விபத்து இடம்பெற்றிருந்தது.

விபத்து ஏற்படும் போது அவரது துணைவியாரும் காரில் பயணித்திருந்தார். எனினும் காரில் பயணித்த எவருக்கும் எவ்விதமான சேதமும் ஏற்படவில்லை.
IMG 20240307 WA0134

IMG 20240307 WA0136

IMG 20240307 WA0137

IMG 20240307 WA0135

IMG 20240307 WA0138

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.