முதலிரவில் அதிகளவு ஊக்க மாத்திரை பயன்படுத்திய மணமகன்-மணமகள் பலி..!

245

உத்தரப்பிரதேசம் ஹமிர்பூரைச் சேர்ந்தவர் அந்த மணமகன். இவருக்குத்தான் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்தப் பெண்ணுக்கு பெற்றோர் யாரும் கிடையாது. அவரது ஒரே சகோதரர் மட்டும்தான். அரசு ஊழியரான அவர், தன் சகோதரி விருப்பப்படியே அந்தத் திருமணத்தைத் தடபுடலாக நடத்தியுள்ளார். அவர்கள் இருவருக்கும் கடந்த பிப்ரவரி 3ஆம் திகதி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்குப் பிறகு முதல் இரவுக்காக தம்பதிகள் அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழலில் மணமகன் ஆண்மையை அதிகரிக்கும் வகையில், அதற்கான மாத்திரைகளை மருத்துவரின் அனுமதியின்றி எடுத்துள்ளார். அவர் மாத்திரைகளை உபயோகித்ததன் விளைவு, அந்தப் பெண்ணை பாலியல் ரீதியாக அதிகளவில் துன்புறுத்தியுள்ளார். இதில் அந்தப் பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. தொடர்ந்தும் அதே பாதிப்பு அந்தப் பெண்ணுக்கு நிகழ்ந்துள்ளது. ஒருகட்டத்தில் அந்தப் பெண்ணின் உடல் மிகவும் மோசமானதை அடுத்து, அருகில் இருந்த வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். அவரைப் பரிசோதித்த வைத்தியர்களும் அவரது உடல்நிலையைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ளனர். கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அளவுக்கு, அந்தப் பெண்ணின் உடல்நிலை மோசமான நிலைமையில் இருந்ததாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

முதலிரவின் போது பாலியல் செயல்பாடுகளை அதிகரிக்கும் மாத்திரைகளை உட்கொண்டு உடலுறவில் ஈடுபட்டதால், பெண்ணுக்கு படுமோசமான காயங்கள் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகவே அந்தப் பெண்ணின் உடல்நிலை மோசமடைந்ததாகவும் வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும் அந்தப் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இறுதியில் அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி கடந்த 10ஆம் திகதி இறந்துவிட்டார். இதுகுறித்து மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மணமகளின் உறவினர்கள் காவல் கண்காணிப்பாளரிடம் முறைப்பாடு அளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் அதற்குள் மணமகன் தனது வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் கிராமத்தைவிட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.