மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் புதியதொரு திருப்புமுனையை ஏற்படுத்திய ஆளுநரின் செயல்..!{படங்கள்}

107

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் புதியதொரு திருப்புமுனையை ஏற்படுத்திய ஆளுநரின் செயல்.

மாற்றுத்திறனாளிகள் எனப்படுவோர் தமது தேவைகளுக்கு குடும்பங்களையே எதிர்பார்த்து வாழ்கின்றனர். இவ்வாறானவர்கள் தமது வாழ்க்கையினை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு பல தடைகளையும் சிரமங்களையும் எதிர் கொள்கின்றனர்.

இவ்வாறானவர்களை இனங்கண்டு இவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வண்ணம் மதிப்புக்குரிய கிழக்கு மாகாண ஆளுநர் அவர்கள் சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது எல்லா தேவைகளுக்கும் குடும்பங்களை நம்பியே காலம் தள்ளியே இவர்களின் முழு வாழ்க்கையுமே மாற்றி அமைக்கும் அளப்பெரிய உதவியாகும்.

இந்த நிகழ்வில் ஆளுநர் நடந்து கொண்ட விதம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. இவர்களுக்கான உபகரணங்களை வழங்கும் போது தமது பதவியை தாண்டிய மனிதாபிமானத்தை வெளிப்படுத்திய இந்த புகைப்படம் இவரின் இரக்க குணத்தையும், சக மனிதன் மீது இவர் கொண்டுள்ள அன்பினையும், மரியாதையும் வெளிக்காட்டியுள்ளது.

பாகுபாடின்றி சகலருக்கும் தேவையான தேவைகளையும், வாய்ப்புகளையும் உரியவர்களிடம் கொண்டு சேர்க்கும் சிறந்த சேவையினை ஆளுநர் மேற்கொண்டு வருகின்றார்.

FB IMG 1707983004846 FB IMG 1707983002171

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.