மாந்தை கிழக்கில் காணாமல் போன இளைஞனின் தொலைபேசி மீட்பு..!

148

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தைகிழக்கு பகுதியில் கடந்த 05.11.2023 அன்று தனது மகனை காணவில்லை என தந்தை ஒருவரால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது

குறித்த முறைப்பாட்டில் ரவிச்சந்திரன் கேமாரஞ்சன் (24) எனும் எனது மகனை கடந்த நான்கு நாட்களாக காணவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது

குறித்த முறைப்பட்டிற்கமைய பொலிசார் தேடிதல் நடவடிக்கையை முடக்கி விட்டிருந்த சந்தர்ப்பத்தில் , காணாமல் போன இளைஞரால் பாவிக்கப்பட்டதென நம்பப்படும் துவிச்சக்கரவண்டி முறைப்பாடு பதிவு செய்யப்படிருந்த பின் ஒரு சில நாட்களில் கண்டெடுக்கப்பட்டதுடன் விசாரணைகளும் இடம்பெற்றிருந்தன

இதேவேளை குறித்த இளைஞனின் வழக்கு முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது

இதேவேளை காணாமல் போன தனது சகோதரனின் தொலைபேசியை இளைஞர் ஒருவர் பாவனையில் வைத்திருப்பதாக காணாமல் போன இளைஞனின் சகோதரனால் நட்டாங்கண்டல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் இன்று தொலைபேசி வைத்திருந்த குறித்த இளைஞரை அழைத்து சென்ற பொலிசார் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொண்ட பின்னர் , வெளி பிரதேசங்களுக்கு செல்வதற்கான தடையினை விதித்து குறித்த இளைஞரை விடுவித்துள்ளதாகவும் குறித்த தொலைபேசியை சான்று பொருளாக நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்த பொலிசார் காணாமல் போன இளைஞன் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.