மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு..!{படங்கள்}

அம்பாறை மாவட்டத்தில் தாயாக கரங்கொடுப்போம் கட்டம் இரண்டு முன்னெடுப்பு- தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

2024ம் ஆண்டு புதிய வகுப்பில் காலடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்திட்டமானது “தாயாக கரம் கொடுப்போம்” எனும் தொனிப்பொருளில்  ஆரம்பிக்கப்பட்டு கிழக்கு மாகாணம் பூராகவும் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் அம்பாறை மாவட்டத்துக்கான இரண்டாம் கட்ட ற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது அண்மையில் இடம்பெற்றிருந்தது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட மகளீர் அணியின் ஏற்பாட்டில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் சுசிகலா அருள்தாஸ் தலைமையில் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெரிய நீலாவணை கல்முனை, நற்பெட்டிமுனை போன்ற பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் அப்பியாச கொப்பிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் குறித்த பிரதேசங்களில் பெண்கள் மற்றும் மகளிர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் சவால்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தது.

இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் சாரதாதேவி, கட்சியின்  கல்முனைத் தொகுதி மகளிர் அமைப்பாளர் நடராசா நந்தினி, அம்பாறை மாவட்ட செயற்குழு  உறுப்பினர் சுந்தரமூர்த்தி சுதேசா  உட்பட கட்சியின் கிராமிய மட்ட மகளிர் நிர்வாகிகள் பயனாளிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

FB IMG 1709202397101 FB IMG 1709202402724 FB IMG 1709202399482 FB IMG 1709202405308

Comments are closed.